Tuesday, December 22, 2009

யாருக்கு உளவாளி?

யாருக்கு உளவாளி? எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் பேட்டியை சூரியக்கதிரில் படித்தேன். ஈழப்பிரச்சனையில் அவரது பார்வை வித்தியாசமானது என்று பேட்டியின் முன்னுரையில் குறிப்பிட்டதுடன் கூடவே விபரீதமானது என்ற சொல்லையும் சேர்த்திருந்தால், சரியானதாக அமைந்திருக்கும்.அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா போன்ற அறிவு ஜீவிகளின் ஈழ அணுகுமுறை குறித்த கருத்துக்களையும், அவற்றின் மீதான விமர்சனங்களையும் இணையதளங்களில் வாசித்து வருபவன் என்கிற முறையில் தங்கள் இதழில் வந்த ஆதவனின் பேட்டியை பற்றி பேசவேண்டியுள்ளது. முதலில் யார் இந்த ஆதவன் தீட்சண்யா? கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர் என்ற பன்முக முகமூடிகளோடு இயங்கு இவர் சமூக பிரச்சனைகளை எந்த பார்வையோடு அலசுகிறாரா? சமூக பார்வைக்கான பிரதான கோட்பாடுகளாக தமிழக மக்கள் கருதும் பெரியாரிசம்,கம்யூனிசம் ஆகிய இந்த இரு பார்வைகளில் எதை தனதானதாக ஆதவன் தேர்ந்தெடுத்து இருக்கிறார்? இலக்கிய உலகில் தனது பலத்திற்காக முற்போக்கு சங்கத்தில் செயல்படும்இவர் பல்வேறு பிரச்சனைகளை தலித்திய பார்வையோடு அணுகுவது சமூக அக்கறையா? சாதீய உணர்வா? ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றோரின் தலித்திய, சிறுபான்மை ஆதரவு என்கிற நிலைப்பாடுகள் சமூகப்பார்வையில் சரியானது என்று நாம் வரவேற்றாலும், அவர்களது உள்நோக்கம் சுயநலத்தை நோக்கிய பயணமாக இருப்பதை நாம் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது. நியாயங்களை புதைகுழியில் புதைத்துவிட்டு அயாயங்களை அழகாக தூக்கிப்பிடித்து, ஒரு குறுகிய வட்டத்தில் செயல்படுபவர்கள் இவர்கள். தலித் அல்லாத இதர சமூக தலைவர்கள் தலித்தின வளர்ச்சிக்கு பாடுபட்ட அளவிற்கு, இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிற அவ்வின அரசியல் தலைவர்களும், ஆதவன் போன்றோரும் அவ்வின மக்களுக்காக பாடுபட்டார்களா என்பது கேள்விக்குறி. சாதியின் பெயரால் அரசியல் பலன்களையும் வேறு வளர்ச்சியினையும் திருமாவளவன், ஆதவன் போன்றவர்கள் அடைந்தனரேயன்றி, இவர்களால் அவ்வின மக்களுக்கு நிகழ்ந்த பயன்களை குறிப்பாக சொல்ல முடியுமா? புலிகளின் 30 ஆண்டுகால மனித நேய ஆட்சியின் காரணமாக தமிழீழ மண்ணில் காணாமல் போயிருந்த சாதீயத்தை மீட்டெடுப்பதற்காகவா ஈழம் சென்றார் இவர்?மலையகத்தில் உள்ள தலித்துகளின் அவலத்தை சுட்டிக்காட்டி பேட்டியில் அலறுகிற இவர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்திற்கு முன் மதுரைக்கு தப்பி வந்த 30 தமிழ் குடும்பங்களை சமீபத்தில் சந்தித்தபோது, அவர்களிடம் தமிழீழ மண்ணில் சாதிகளின் செயல்பாடு, பாகுபாடுகள் பற்றி கேட்டபோது, விடுதலைப்புலிகளின் ஆட்சிக்கு முன் அங்கே சாதிகளின் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. ஆனால் புலிகளின் 30 ஆண்டுகால ஆட்சியில் தமிழிழ மண்ணில் சாதீய பாகுபாடுகள் இல்லை. யாராவது சாதீய உணர்வோடு, செயல்பட்டால் அவர்களை புலிகள் கடுமையாக தண்டிப்பார்கள் என்று கூறினார்கள். சாதீயத்தை விட மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழீழ மண்ணில் சமத்துவ மனோபாவத்தை நிறுவிய புலிகளை பற்றி பேட்டியில் ஆதவன் புகழாவிட்டால் பரவாயில்லை.போகிற போக்கில், பலவீனமான நேரத்தில் அமைதிப்பேச்சை புலிகள் கையில் எடுப்பார்கள் என்று புலிகளின் மீது குற்றம்சாட்டுகிறார். ஆனால் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி விஷ குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்த துரோகிகளை புத்திசாலிகள் என்று புகழ்கிறார்.வெறும் புத்தக படித்து அதை வார்த்தைகளில் வாந்தி எடுக்கும் ஆதவன் தீட்சண்யா போன்ற அறிவாளிகள் எதை வேண்டுமானால் எழுத முடியும். ஆனால், யுத்தகளத்தில் பல்வேறு கோணங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராளிக்கு ஜனநாயக மண்ணில் இருந்து, அறிவுரை சொல்லுமுன் தனக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். மேலும் சூழ்லை புரியாமல் இங்கிருப்பவர்கள் போரை உசுப்பேற்றிவிட்டதன் விளைவாக யுத்தம் நடந்தது என்று குற்றச்சாட்டு வேறு? ராணுவ முறை யுத்தத்திலிருந்து மீண்டும் பழைய கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருந்தால் கூட இன்றும் இலங்கை ராணுவம் திணறிக்கொண்டு இருக்கும். ஆனால், மக்களுக்காக புலிகளின் ஆயுதங்கள் மௌனித்ததன் பேரில் ராஜபக்சேக்களின் போலி வெற்றிக்கு துணை நிற்கும் துரோகங்களின் வரிசை நீள்கிறது. தற்போது தமிழீழ மக்களின்மீது ராஜபக்சே அரசு நடத்தி வரும் உளவியல் போரின் ஒரு பங்கே ஆதவன் தீட்சண்யாவின் ஈழப்பயணம். எங்கே தமிழ் உணர்வால் மீண்டும் ஒன்று திரண்டு தனக்கு பிரச்சனையாக தமிழர்கள் உருவெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை சாதியின் பேரில் பிளவுபடுத்தும் ராஜபக்சேவின் நோக்கத்தின் அரங்கேற்றமே ஆதவனின் யாழ்ப்பாண பயணம்.தமிழக அரசின் குழுவே பல்வேறு கட்ட அனுமதிக்குப்பின் ஈழம் சென்றது. ஆனால் தனிமனிதனான ஆதவன் தீட்சண்யாவிற்கு யாழ்ப்பாண செல்ல வாய்ப்பு கிடைத்தது எப்படி?ஏதாவது ஒரு குழுவின் ஏற்பாடு என்றால் அதன் அடையாளம் என்ன? ஈழப்பிரச்சனையில் அதன் நோக்கம் என்ன?போரின் துன்பியல் சபவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட புலிகளின் மீது வெறுப்பை உமிழாத போது புலிகளை ஒதுக்கும் இந்த புத்திசாலியின் நோக்கம் என்ன? காலம் இவரது கரங்களில் எழுத்து என்கிற அற்புதமான ஆயுதத்தை தந்திருக்கிறது. அதை உண்மையின் வலிமையை உணர்த்துவதற்காக பயன்படுத்தட்டும், உளவாளி வேலைக்கு பயன்படுத்த வேண்டாம். இவர் எழுதாமல் தனது பேனாவை மௌனிக்க செய்தால் கூட பரவாயில்லை. ஒரு உண்மையான போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் பணியை உளவாளியாக செய்யவேண்டாம். நல்ல கவிஞனாக கபீரமான எழுத்துப்பணிகளை மட்டும் இனி இவர் செய்யட்டும்.

Friday, December 4, 2009

கவிதைகள்

நன்றி

16 வருடங்களுக்கு
முன் எனக்காக ஒரு
அழகான தவறை செய்த
உன் தகப்பனுக்கு நன்றி!



வாழ்க்கை

பால் வேண்டுமென
என் குழந்தை அழ
பனை மரத்துப்பால் குடித்து
என் கணவர் வர
யாரை நான் சீராட்ட...
யாரை நான் தாலாட்ட...!