பகுத்தறிவுக்கு அதிகம் உரிமையுள்ளவர்கள்ஆன்மீகவாதிகளா? நாத்திகவாதிகளா?
மற்ற உயிரினங்களை விட மனிதனை மேம்படுத்தி காட்டுவது அவனது ஆறாவது அறிவு. அதனால் கலை, இலக்கிய பண்பாட்டு, அறிவியல் தளங்களில் உலகத்தை மாற்றி தனது கைவிரலுக்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் மனிதன்.இருந்தபோதும், அவனது தேடல்கள் தொடர்கின்றன. தேடலின் தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.அதே சமயம், தேடலுக்கான பாதையாக ஆன்மீகத்தையோ, நாத்திகத்தையோ தேர்ந்தெடுத்துக்கொண்டவர்கள் இலக்குகளைவிட பாதைகளை பற்றி சிலாகித்து பேசுவதும், அதற்காக மோதுவதும் தொடர்கிறது.இந்த நிலையில், தேடலை செழுமைப்படுத்த அறிந்ததினின்று அறியாததை தேடும் பகுத்தறிவை பலப்படுத்த, நமக்குள் துவக்குவோம் ஓர் இனிய விவாதம்.பகுத்தறிவின் மீது உரிமை கொண்டாட ஆத்திகர்கள், நாத்திகர்கள் இவர்களில் யாருக்கு உரிமை அதிகம்?உங்களின் கருத்துக்கள் விவாத தளத்திற்கு வரட்டும். புதிய கருத்துகளை ஆவலோடு சந்திப்போம்.
Tuesday, April 8, 2008
Subscribe to:
Posts (Atom)